புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகமானது ஒடிசாவில் உள்ள கொனார்க் சூரியக் கோயில் மற்றும் கொனார்க் நகரம் முழுவதையும் சூரிய ஒளி ஆற்றலில் இயங்கும் தன்மையுடையதாக ஆக்கியுள்ளது.
இது 13வது நூற்றாண்டில் கங்கை வம்சத்தின் தலைசிறந்த ஆட்சியாளரான முதலாம் நரசிம்மதேவரால் கட்டப் பட்டுள்ளது.
இதன் இருண்ட (கருப்பு) வண்ணத்தின் காரணமாக இந்தக் கோயில் “கருப்பு பகோடா” என்று அழைக்கப் படுகின்றது.
இதே போன்று பூரி ஜெகன்நாத் கோயில் “வெள்ளைப் பகோடா” என்று அழைக்கப் படுகின்றது.
கொனார்க் ஆனது ஒடிசாவின் தங்க முக்கோணத்தின் மூன்றாவது தொடர் இணைப்பாகும்.
முதலாவது தொடர் இணைப்பு பூரி ஜெகன்நாத் மற்றும் இரண்டாவது தொடர் இணைப்பு புவனேஸ்வர் (ஒடிசாவின் தலைநகரம்) ஆகும்.
இந்தக் கோயிலானது 1984 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது.
இந்தக் கோயிலானது கலிங்கா கட்டிடக்கலை மற்றும் அதன் பாரம்பரியத்தை வடிவமைத்து அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் சந்திரபாகா மேளா நடத்தப் படுகின்றது.