கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான ஐக்கிய இராஜ்ஜியத்தின் உத்தி
March 18 , 2020 1949 days 637 0
பிரதமரான போரிஸ் ஜான்சனின் கீழ் உள்ள ஐக்கிய இராஜ்ஜிய அரசானது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக “ஹெர்டு இம்யுனிட்டி” (குழு நோய் எதிர்ப்பு சக்தி) என்ற ஒரு உத்தியைப் பின்பற்றியுள்ளது.
ஹெர்டு இம்யுனிட்டி
குழு நோய் எதிர்ப்பு சக்தியானது தடுப்பூசிகள் மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதன் மூலமாகவும் அடையப் படுகின்றது.
அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குத் தடுப்பூசி போடும் போது, தடுப்பூசி போடாதவர்களும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறுகின்றார்கள்.
தொற்றுநோய்களில் கூட, குறிப்பிட்ட காலப் பகுதியில், பெரும்பான்மையான மக்கள் நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறும்போது, அதன் பரவலின் அளவானது குறைகின்றது.
இது ஐக்கிய இராஜ்ஜியத்தில் "குழு நோய் எதிர்ப்பு சக்தி" என்று பின்பற்றப்படும் ஒரு உத்தியாகும்.