உலக நாடுகளுக்கான கொரோனா வைரஸ் தொடர்பான கண்டுபிடிப்புகளின் தர வரிசையில் இந்தியா ஆறு இடங்கள் பின்தள்ளப்பட்டு 32வது இடத்தைப் பெற்றுள்ளது.
UNAIDS அமைப்பின் சுகாதாரப் புதுமைப் பரிமாற்ற அமைப்புடன் இணைந்து ஸ்டார்ட் அப் பிளிங்க் (StartupBlink) என்ற அமைப்பினால் உருவாக்கப்பட்ட அறிக்கையில் இத்தகவலானது கூறப்பட்டுள்ளது.
பெருந்தொற்றினை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட புதுமையான தீர்வுகளின் அடிப்படையில் உலகின் முதல் 40 நாடுகளையும் முதல் 100 நகரங்களையும் இந்த அறிக்கை தரவரிசைப்படுத்துகிறது.
இந்தியாவின் பெங்களூரு (49வது) மற்றும் புதுடெல்லி (55வது) ஆகிய இரு நகரங்கள் முதல் 100 இடங்களில் உள்ளன.
இந்த ஆண்டு இந்தியாவில் கோவிட் தொடர்பான 15 புதுமையான கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அவை பின்வருமாறு
தடுப்பு நடவடிக்கையில் நான்கு கண்டுபிடிப்புகள்
உதவி மற்றும் ஆதரவு நடவடிக்கைகளில் மூன்று,
தகவல் வழங்கீட்டில் ஒன்று,
சிகிச்சை வழங்கலில் மூன்று மற்றும்
பரிசோதனையில் நான்கு
அமெரிக்க நாடானது இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.