கொலம்பியாவின் சிரிபிகியூட் பூங்கா- உலக பாரம்பரிய இடம்
July 8 , 2018 2730 days 857 0
ஐக்கிய நாடுகள், கொலம்பியாவின் சிரிபிகியூட் தேசிய பூங்காவினை தனது உலக பாரம்பரிய இடங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
காகுய்ட்டா மற்றும் குவாவியர் ஆகிய தெற்கு மாகாணங்களில் அகண்டு காணப்படும் இந்த பூங்காவானது, நாட்டின் பெரியதும் வடக்கு அமேசானில் மிகப்பெரிய அளவிலான தாவரப் பன்முகத் தன்மையைக் கொண்டதுமான பூங்காக்களுள் ஒன்றாகும்.
காடுகளிலிருந்து வெளியே உயரும் டெபூய்ஸ் என்ற மேசை மேற்பரப்பு போன்ற பாறை அமைப்பிற்கும் இந்த பூங்கா பிரபலமானதாகும்.
கொலம்பியாவில் உலகப் பாரம்பரிய தளம் என்ற தகுதி கொடுக்கப்பட்ட 9வது இடம் இதுவாகும்.
சிரிபிகியூட் 1989-ல் முதன்முதலில் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இது உலகின் பழமையான பாறை அமைப்புகளின் ஒன்றின் மேல் அமைந்துள்ளது.