கொலீஜியம்/நீதிபதிகள் தேர்வுக் குழு குறித்து உச்ச நீதிமன்றம்
September 25 , 2026 7 days 90 0
தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான சட்டத்திற்கு எதிரான சவாலை விசாரிக்கும் போது உச்ச நீதிமன்றம் கொலீஜியம்/நீதிபதிகள் தேர்வுக் குழு அமைப்பை ஆதரித்தது.
தேர்தல் ஆணையர் தேர்வு செயல்முறையுடன் கொலீஜியத்தை/நீதிபதிகள் தேர்வுக் குழுவை மத்திய அரசு ஒப்பிடுவது "கவலைக்குரியது" என்று நீதிபதி தீபங்கர் தத்தா தெரிவித்தார்.
நீதித்துறை நியமனங்களில் நிர்வாகத் துறைக்கு பங்கு இருப்பதாகவும், கொலீஜியத்தின்/நீதிபதிகள் தேர்வுக் குழுவின் பரிந்துரைகளை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொலீஜியம்/நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரைத்த பெயர்களில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து மத்திய அரசு ஒப்புதல் அளிப்பது குறித்தும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
கொலீஜியம்/நீதிபதிகள் தேர்வுக் குழு என்பது மூத்த நீதிபதிகள் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கவும் இடமாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யும் அமைப்பாகும்.