TNPSC Thervupettagam

கொல்லால குடி தேசிய நினைவுச் சின்னம் - தெலுங்கானா

September 8 , 2026 5 days 124 0
  • தெலுங்கானா மாநிலம், முலுகு மாவட்டம், பாலம்பேட்டை கிராமத்தில் உள்ள கொல்லால குடி கோவில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கப் பட்டது.
  • மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் அரசிதழ் அறிவிப்பு மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • காகத்தியர் காலத்தைச் சேர்ந்த (கி.பி. 12-13 நூற்றாண்டுகள்) இந்தக் கோவில் ஒரு திரிகுடாலயா ஆகும், அதாவது இது மூன்று கருவறைகளைக் கொண்டுள்ளது.
  • நீர் தேங்குவதைத் தடுப்பது மற்றும் பார்வையாளர்கள் செல்வதற்கான பாதையை மேம்படுத்துவது உள்ளிட்ட அதன் பாதுகாப்புப் பணிகளை இந்தியத் தொல்லியல் துறை (ASI) மேற்கொள்ளும்.
  • இது சேர்க்கப்பட்டதன் மூலம், தெலுங்கானாவில் ASI பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தக் கோவில் காகத்திய கட்டிடக் கலையுடன் தொடர்புடைய யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமான ராமப்பா கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்