அந்தமான் மற்றும் நிக்கோபருக்கு அருகிலுள்ள கோகோ தீவுகளில் சீன நாட்டினர் யாரும் இல்லை என்று மியான்மர் இந்தியாவிடம் தெரிவித்தது.
மியான்மரின் நேபிடாவில் நடைபெற்ற பாதுகாப்பு பேச்சுவார்த்தையின் போது இந்த அறிக்கை வெளியிடப் பட்டது.
கோகோ தீவுகளுக்கு கடற்படை வருகை தருவதற்கான இந்தியாவின் கோரிக்கைக்கு மியான்மரிடமிருந்து எந்தப் பதிலும் வழங்கப் படவில்லை என்பதால் அது இன்னும் நிலுவையில் உள்ளது.
செயற்கைக்கோள் படங்கள் 2,300 மீட்டர் விமான ஓடுபாதை மற்றும் புதிய இராணுவ உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இருப்பதைக் காட்டுகின்றன.
1,500 பணியாளர்களுக்கான புதிய இராணுவ முகாம்கள் மற்றும் ஜெர்ரி தீவு சமிக்ஞை விரிவாக்க உள்கட்டமைப்பிற்கான ஒரு தரைவழி ஆகியவை இங்கு கட்டமைக்கப் படுகின்றன.
அருகிலுள்ள இடங்களிலிருந்து, எறிகணை சோதனைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் செயல்பாடுகளை சீனா கண்காணிக்கக் கூடும் என்று இந்தியா சந்தேகிக்கிறது.
மியான்மர் அங்கு சீனப் படைகளின் இருப்பை மறுத்தாலும், அது சீனாவுடன் தொடர்புடைய தீவிர கிளர்ச்சியாளர்களுடன் வடக்குப் பகுதிகளில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.