கோதாவரி நதிப் படுகையில் பெரும் பழங்காலத்தில் காட்டுத்தீ (பழங்கால நெருப்பு) ஏற்பட்டது பற்றிய ஆதாரங்களை சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
இந்த தீயானது, பிற்கால சிலூரியன் (419.2 முதல் 443.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (mya) முதல் நான்காம் நூற்றாண்டு (2.58 மில்லியன்) காலம் வரை நீடித்தது.
இந்தத் தீயானது தாவரங்கள், பருவநிலை மற்றும் நிலக்கரி உருவாக்கத்தில் கூட ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தியதன் மூலம் நிலப்பரப்புகளில் அதன் அடையாளத்தினை விட்டுச் சென்றுள்ளது.
ஆராய்ச்சிக் குழுவானது உள்ளிட (இடம் சார்ந்த) மற்றும் வெளியிட (பரவிய) கரி ஆகியவற்றை வெற்றிகரமாக வேறுபடுத்தியது.