TNPSC Thervupettagam

கோதுமை மற்றும் அரிசிக்கான இருப்பு விலைகள் 2025/26

July 25 , 2025 2 days 22 0
  • நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பான உணவு மற்றும் பொது விநியோகத் துறை (DFPD), கோதுமை மற்றும் அரிசிக்கான இருப்பு விலைகளை நிர்ணயித்துள்ளது.
  • இந்த தானியங்கள் வெளிச் சந்தையில் எவ்வளவு அளவு விற்கப்படும் என்பதை அது அறிவிக்கவில்லை, அதனை இந்திய உணவுக் கழகமே (FCI) முடிவு செய்யும்.
  • வெளிச் சந்தை விற்பனைத் திட்டம்-உள்நாட்டு (OMSS-D) திட்டத்தின் கீழ் மையத் தொகுப்பிலிருந்து FCI அமைப்பு இணைய வழி ஏலங்கள் மூலம் வெளிச் சந்தையில் விற்கும் குறைந்தபட்ச விலையே இருப்பு விலையாகும்.
  • பொது விநியோக முறை (PDS) மூலம் உணவு தானியங்களை FCI கொள்முதல் செய்து, சேமித்து, விநியோகிக்கிறது.
  • FCI ஆனது, இந்தத் திட்டத்தின் கீழ் தானியங்களை, முக்கியமாக கோதுமை மற்றும் அரிசியை, வெளிச் சந்தையில் ஒரு வழி முறையாக இணைய வழி ஏலத்தின் மூலம் வழங்குகிறது.
  • இந்த வழிமுறையானது உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய உதவுகிறது, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் குறைந்தபட்ச விலை நிலைகளைப் பேணுவதன் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கிறது.
  • 2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகளவில் சுமார் 117 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி என்பது பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்