கோயில் நில விற்பனை, பரிமாற்றம், குத்தகை மற்றும் அடமானம் ஆகியவற்றிற்கான 2025 ஆம் ஆண்டு சமய நிறுவனங்களின் அசையா சொத்துக்களை அந்நியப் படுத்துவதற்கான விதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதியன்று அரசு உத்தரவு மூலம் இந்த விதிகள் அறிவிக்கப் பட்டன.
கோயில் நிலத்தின் மதிப்பு ஆனது, சந்தை மதிப்பு அல்லது வழிகாட்டுதல் மதிப்பின் அதிகபட்ச மதிப்பைப் பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட வேண்டும்.
நகர்ப்புறங்களில் விற்பனை மதிப்பு 225%, 30 கி.மீட்டருக்குள் 275%, 30–50 கி.மீட்டருக்குள் 325% மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து 50 கி.மீட்டருக்கு அப்பால் 425% என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.
பரிமாற்றமாக வழங்கப்படும் நிலங்களுக்கு எந்த வில்லங்கமும் இல்லாமல் முறையான உரிமம் இருக்க வேண்டும் என்பதோடுமேலும் அவை தடை செய்யப்பட்ட அல்லது சுற்றுச்சூழல் தாங்கு திறன் மண்டலங்களில் இருக்கக்கூடாது.
விற்பனை, பரிமாற்றம், ஐந்து ஆண்டுகளுக்கான குத்தகை அல்லது அடமானத்திற்கான முன் மொழிவுகள் அரசிதழ், மாவட்ட அரசிதழ்களில் வெளியிடப் பட வேண்டும் என்பதோடுமேலும் ஆட்சேபனைகளுக்கான பொது அறிவிப்புகள் 30 நாட்களுக்குள் வெளியிடப்பட வேண்டும்.