TNPSC Thervupettagam

கோயில் நுழைவு குறித்து சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு 2025

July 22 , 2025 5 days 64 0
  • சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் ஒரு நாட்டில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
  • அது உடையார் பாளையம் தாலுக்காவில் உள்ள புதுக்குடி அய்யனார் கோயிலுக்குள் பட்டியலிடப் பட்ட சாதியினைச் சார்ந்த நபர்கள் நுழைவதைத் தடுக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய அரியலூர் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது.
  • அது தற்போது நடைபெறும் வருடாந்திரத் திருவிழா உட்பட, அனைத்து வகுப்பு மக்களும், அவர்களின் சாதியைப் பொருட்படுத்தாமல், எல்லா நேரங்களிலும் இக்கோயிலுக்குள் நுழைந்து கடவுளை வழிபட அனுமதிக்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிட்டது.
  • 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம் ஆனது எந்தவொரு நபருக்கும் சாதியின் அடிப்படையில் கோயில் நுழைவு மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இயற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்