TNPSC Thervupettagam

கோர்கா படைப்பிரிவின் ஆட்சேர்ப்பு - நேபாளம்

August 30 , 2022 1048 days 517 0
  • புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய இராணுவத்தில் கூர்க்கா பிரிவினரை ஆட்சேர்ப்பு செய்வதை நிறுத்துமாறு நேபாளம் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.
  • இதனால் நேபாள அரசானது தனது ஆட்சேர்ப்புச் செயல்முறையை காலவரையின்றி நிறுத்தி உள்ளது.
  • கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இராணுவ ஆட்சேர்ப்பு நடவடிக்கை என்பது இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டது.
  • 1947 ஆம் ஆண்டில் நேபாளம், இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் மேற் கொண்ட ஒப்பந்தத்தின் விதிமுறைக்கு இத்திட்டம் இணங்கவில்லை என்று நேபாள அரசு கூறியது.
  • இந்த 1947 ஆம் ஆண்டு ஒப்பந்தமானது நேபாள வீரர்களை இந்திய இராணுவத்தில் சேர்க்கும் நடைமுறையினை நிர்வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்