TNPSC Thervupettagam

கோர்டெலியா கடற்பயண நிறுவனம் – IRCTC

September 22 , 2021 1419 days 610 0
  • இந்திய இரயில்வே சமையல் மற்றும் சுற்றுலாக் கழகமானது (Indian Railway Catering and Tourism Corporation – IRCTS) கோர்டெலியா கடற்பயண நிறுவனத்துடன் கைகோர்த்து அதனுடன் ஒரு  ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • கோர்டெலியா கடற்பயண நிறுவனமானது M/s  Waterways Leisure Tourism Pvt. Ltd என்ற ஒரு நிறுவனத்தினால் இயக்கப்படுகிறது.
  • இது இந்தியாவின் முதல் சுதேச (உள்நாட்டுப் பயணம்) சொகுசுப் பயணத்தை ஊக்குவிப்பதற்கும் அதனைச் சந்தைப்படுத்துவதற்கும் வேண்டி ஆரம்பிக்கப் பட்டத் ஆகும்.
  • இது IRCTC கழகத்தின் சுற்றுலாச் சேவைகளின் கீழ் வழங்கப்படும் பொது மக்களுக்கான வியக்கத் தக்க மற்றுமொரு ஆடம்பரமான பயணச் சேவை ஆகும்.
  • இந்த ஆடம்பர பயணச் சேவையானது  உள்நாட்டுப் பயணமாக பயணிகளை கோவா, டையூ, கொச்சின், லட்சத்தீவு மற்றும் இலங்கை போன்ற மிகவும் பிரபலமான இந்திய மற்றும் சர்வதேச சுற்றுலாத் தளங்களுக்கு அழைத்துச் செல்லும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்