கோலாபுரி செப்பல் கைவினைஞர்கள் பிராடா நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டு தயாரிப்பு வடிவங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.
இது அவர்களின் பாரம்பரியக் காலணி வடிவமைப்பை நகலெடுத்தவாறு உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
கோலாபுரி செப்பல்கள் என்பது விரல்கள் வெளியே தெரியும் வகையிலான, T வடிவ பட்டைத் தோற்றம் மற்றும் நீடித்து நிலைக்கும் தன்மைக்கு பெயர் பெற்ற கைவினை மூலம் உருவாக்கப்பட்ட தோல் செருப்புகள் ஆகும்.
கோலாப்பூர் (மகாராஷ்டிரா) மற்றும் அருகிலுள்ள கர்நாடகா மாவட்டங்களில் இருந்து தோன்றிய இவை 2019 ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு பெற்றன.
13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கைவினைப் பொருள் ஆனது, தாவர மூலங்களில் இருந்து பெறப்பட்ட பதனிடப்பட்ட எருமைத் தோலைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், ஆணிகள் இல்லாமல் தயாரிக்கப்படும் நுட்பத்திற்காக புகழ்பெற்று அறியப்படுகிறது.