May 1 , 2019
2384 days
926
- 6 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகழ்பெற்ற கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதினைப் பெற்றுள்ளனர்.
- கோல்டுமேன் விருதானது “பசுமை நோபல் விருது” என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்த விருது 6 கண்டங்களைச் சேர்ந்த 6 சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இந்த விருதானது அமெரிக்காவைச் சேர்ந்த நன்கொடையாளர்களான ரோடா மற்றும் ரிச்சர்டு கோல்டுமேன் ஆகியோரால் 1989 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
- புகழ்பெற்ற சமூக ஆர்வலரான மேத்தா பட்கர் இந்த விருதை 1992 ஆம் ஆண்டில் பெற்றார்.
- குஜராத்தில் உள்ள நர்மதை பள்ளத்தாக்கு வளர்ச்சித் திட்டத்திற்கு எதிராக போராடியதற்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
- 2019 ஆம் ஆண்டின் வெற்றியாளர்கள் :
வெற்றியாளர்
|
நாடு
|
| பாயர்ஜர்கால் அக்வாண்ட் செரீன் |
மங்கோலியா |
| அல்பெர்ட் ப்ரௌன்வெல் |
லைபீரியா |
| அல்பெர்டோ குராமில் |
சிலி |
| ஜாக்குலின் எவான்ஸ் |
குக் தீவுகள் |
| லிண்டா கார்சியா |
அமெரிக்கா |
| அனா கோலோவிக் லெசோஸ்கா |
வட மாசிடோனியா |
Post Views:
926