TNPSC Thervupettagam

கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருது 2026

April 23 , 2026 37 days 113 0
  • கோல்ட்மேன் சுற்றுச்சூழல் அறக்கட்டளையானது 2026 ஆம் ஆண்டிற்கான கோல்ட் மேன் சுற்றுச்சூழல் விருதை முதல் முறையாக முழுவதும் பெண்களைக் கொண்ட குழுவிற்கு வழங்கியுள்ளது.
  • "பசுமை நோபல் பரிசு" என்று அழைக்கப்படும் இந்த விருது, 1989 ஆம் ஆண்டு கோல்ட்மேன் சுற்றுச்சூழல் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது.
  • இந்த விருது உலகின் ஆறு பிராந்தியங்களைச் சேர்ந்த அடிமட்டச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கௌரவிக்கிறது.
  • இரோரோ டான்ஷி (நைஜீரியா), போரிம் கிம் (தென் கொரியா), சாரா ஃபின்ச் (ஐக்கிய பேரரசு), தியோனிலா ரோகா மேட்போப் (பப்புவா நியூ கினியா), அலன்னா அக்காக் ஹர்லி (அமெரிக்கா) மற்றும் யுவெலிஸ் மோரல்ஸ் பிளாங்கோ (கொலம்பியா) ஆகிய ஆறு பெண்கள் இந்த விருதை வென்றுள்ளனர்.
  • பருவநிலை மாற்றம், பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகிய தளங்களில் இவர்கள் ஆற்றிய பணிகளை இவ்விருது அங்கீகரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்