இந்தியக் கடற்படையானது கோவாவிலுள்ள கடற்படைப் போர் கல்லூரி வளாகத்தினுள் “கோவா கடல்சார் கருத்தரங்கம் – 21” என்ற ஒரு கருத்தரங்கினை நடத்தியது.
இந்த நிகழ்வானது முதல்முறையாக காணொலி மூலம் நடத்தப் பட்டுள்ளது.
தனது கடல்சார் அண்டை நாடுகளுடன் நட்புறவினை வளர்ப்பதற்காக இந்த கருத்தரங்கானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் இந்தியப் பெருங்கடலில் கரையோரம் அமைந்த 13 நாடுகளின் கடற்படைப் பிரதிநிதிகள் இணைய தளம் வாயிலாக பங்கேற்றனர்.
இந்த ஆண்டிற்கான கருத்துரு, “கடல்சார் பாதுகாப்பு மற்றும் அதிகரித்து வரும் வழக்கமற்ற அச்சுறுத்தல்கள் : இந்தியப் பெருங்கடல் பகுதியின் கடற்படை திறன்பட செயல்படுவதற்கான ஒரு சூழ்நிலை” (Maritime Security and Emerging Non-Traditional Threats: A Case for Proactive Role for IOR Navies) என்பதாகும்.