உச்ச நீதிமன்றக் குழுவானது, படிப்படியாக கோவா புலிகள் சரணாலயத்தை உருவாக்கப் பரிந்துரைத்துள்ளது.
முதல் கட்டத்தில், நேத்ராவளி மற்றும் கோடிகாவோ வனவிலங்குச் சரணாலயங்கள் உட்பட 468.6 சதுர கி.மீ. பரப்பளவு அறிவிக்கப்படும்.
இரண்டாவது கட்டத்தில், மகாதேய் வனவிலங்குச் சரணாலயம் உட்பட 208 சதுர கி.மீ. பரப்பளவினை அறிவிப்பது குறித்து பின்னர் பரிசீலிக்கப்படலாம்.
இந்தப் பகுதிகள் கர்நாடகாவின் காளி புலிகள் சரணாலயத்துடன் இணைந்து, 1,814 சதுர கி.மீ. அளவிலான ஒருங்கிணைந்த நிலப்பரப்பை உருவாக்கும்.
முக்கிய மண்டலங்கள் கண்டிப்பான முறையில் பாதுகாக்கப்படுவதோடு, புலிகள் வளங் காப்பிற்கான நிதி மற்றும் ஆதரவை உறுதி செய்து, இடையக/தாங்கு மண்டலங்களில் வரையறுக்கப்பட்ட மனிதச் செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.