1987 ஆம் ஆண்டில் இந்தியாவின் 25-வது மாநிலமாக கோவா உருவானதன் 40-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்த தினம் 2026 ஆம் ஆண்டு மே 30 அன்று கொண்டாடப் பட்டது.
1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1961 ஆம் ஆண்டு வரை கோவா போர்த்துகீசியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.
போர்த்துகீசிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும், கோவா, டாமன் மற்றும் டையூவை இந்திய ஒன்றியத்துடன் ஒருங்கிணைக்கவும் இந்தியாவால் 'விஜய் நடவடிக்கை' (1961 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 முதல் 19 வரை) தொடங்கப்பட்டது.
1962 ஆம் ஆண்டின் 12-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கோவா, டாமன் மற்றும் டையூவை ஒரு ஒன்றியப் பிரதேசமாக இணைத்தது.
அதிகாரப்பூர்வ மொழிச் சட்டம் 1987, கொங்கனியை கோவாவின் அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரித்ததுடன் இது தனி மாநில அந்தஸ்திற்கான கோரிக்கையை வலுப்படுத்தியது.
1987 ஆம் ஆண்டு மே 30 அன்று, கோவா முழு மாநில அந்தஸ்தைப் பெற்றது, அதே நேரத்தில் டாமன் மற்றும் டையூ தனி ஒன்றியப் பிரதேசமாக மாறியது.