1987 ஆம் ஆண்டில் இதே நாளில் தான் கோவா இந்தியாவின் 25வது மாநிலமாக உருவாக்கப் பட்டது.
இதற்கு முன்பாக டாமன் மற்றும் டையூ ஆகியவற்றுடன் சேர்த்து கோவாவும் ஒரு ஒன்றியப் பிரதேசமாக இருந்தது.
1961 ஆம் ஆண்டில் டிசம்பர் 19 ஆம் தேதியன்று இந்திய இராணுவமானது ஆபரேஷன் விஜய் என்ற ஒரு நடவடிக்கையின் மூலம் போர்ச்சுக்கீசியர் மீது போர் தொடுத்து வெற்றி பெற்றதன் வாயிலாக கோவா, டாமன் & டையூ தீவுகள் ஆகியவற்றை இந்தியாவுடன் இணைத்தது.