கோவிட் – 19ன் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான குழு
March 27 , 2020 1973 days 596 0
நாட்டில் கோவிட் – 19ன் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பொதுச் சுகாதார வல்லுநர்களைக் கொண்ட ஒரு உயர் மட்ட தொழில்நுட்பக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
21 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவானது நிதி ஆயோக்கின் உறுப்பினரான டாக்டர்.வி.கே.பால் என்பவரால் தலைமை தாங்கப்பட இருக்கின்றது.
இந்தக் குழுவில் மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் பொது இயக்குநர் ஆகியோர் இணைத் தலைவர்களாகச் செயல்படுவர்.