கோவிட் – 19ற்காக இந்திய ஆராய்ச்சியாளர்களின் எதிர்வினை (ISRC - Indian Scientists’ Response to CoViD-19)
March 30 , 2020 1956 days 627 0
இது தேசிய உயிரியல் அறிவியல் மையம், இந்திய அறிவியல் நிறுவனம், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு தன்னார்வக் குழு ஆகும்.
இது அறிவியல் தகவல் தொடர்பில் தனது திறமையான பங்களிப்பிற்காக தினத்தோறும் நிகழ்ந்து வரும் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்க இருக்கின்றது.
இது ஆய்வு முடிவுகளை வெளிக்கொண்டு வருவதற்காக தற்பொழுதுள்ள மற்றும் கிடைக்கக் கூடிய தரவுகளை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் பணிகளை மேலும் மேம்படுத்துவதற்கு உதவ இருக்கின்றது.
இந்தத் தளமானது இரண்டு முறைகளின் மூலம் செயல்படுகின்றது. இது உதவியை வழங்கக் கூடியவர்களை உதவியை எதிர்பார்க்கும் மக்களுடன் இணைப்பதற்காக கைபேசி மற்றும் கட்செவி ஆகிய இரண்டு முறைகளில் செயல்படுகின்றது.