கோவிட் – 19 தொற்றிற்காக நடத்தப்படும் ஆய்விற்கு நோயாளிகளிடமிருந்து கட்டணம் (ரூ. 4500) ஏதும் வசூலிக்கக் கூடாது என்று தனியார் மருத்துவ ஆய்வகங்களுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
மேலும் கரோனா தொற்று குறித்த சோதனையானது என்ஏபிஎல் (NABL - National Accreditation Board for Testing and Calibration Laboratories) ஆய்வகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் அல்லது உலகச் சுகாதார அமைப்பு அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தனியார் நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேணடும் என்றும் இந்தத் சோதனைக்காக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக ஒரு நடைமுறையை அரசு உருவாக்க வேண்டும் என்றும் இந்த அமர்வு கூறியுள்ளது.