கோவிட் – 19 தொற்றைக் கண்டறிவதற்கான “SALIVA DIRECT” சோதனை
August 21 , 2020 2196 days 1015 0
அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பானது கோவிட் – 19 நோய்த் தொற்றிற்கான நோய்க் கண்டறிதல் சோதனையான உமிழ்நீரை அடிப்படையாகக் கொண்ட ஒரு அவசர காலச் சோதனைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
இது முடிவுகளை விரைவாக அளிக்கின்றது.
இந்தச் சோதனை முறையானது “SALIVA DIRECT” என்று பெயரிடப் பட்டுள்ளது.
“SALIVA DIRECT” சோதனை முறையானது “நாசி தொண்டையில் உள்ள உமிழ்நீரை எடுத்தல்” எனப்படும் ஒரு வழக்கமான முறையுடன் ஒப்பிடும்போது எளிமையானதாகவும் விலை குறைந்ததாகவும் உள்ளது.