ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இதர நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கோவிட் – 19 தொடர்பான தொழில்நுட்பத் திறன்களை ஆராய்வதற்காக மத்திய அரசு “கோவிட் – 19 பணிக் குழு” ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திறன் கண்டறிதல் குழுவானது பின்வருவனவற்றிலிருந்து பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
உயிரித் தொழில்நுட்பத் துறை
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கழகம்
அடல் புத்தாக்கத் திட்டம்
மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை நிறுவனங்கள் துறை அமைச்சகம்