கோவிட் – 19 வைரஸ் போன்ற தோற்றத்தைக் கொண்ட 3 துணை இனங்கள்
April 2 , 2020 1971 days 674 0
நாட்டில் கோவிட் – 19 என்ற வைரஸ் போன்ற தோற்றத்தைக் கொண்ட 3 துணை வைரஸ் இனங்கள் உலவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR - Indian Council of Medical Research) அறிவித்துள்ளது.
இந்தக் கழகத்தின் படி, இவை வெளிநாட்டிலிருந்துப் பரவி வந்த வைரஸ் வகைகளாகும்.
இந்தியாவில், கோவிட் – 19 வைரஸ் தொற்றானது வெளிநாட்டிற்குப் பயணம் செய்த (வெளிநாட்டிலிருந்து வந்த) மக்களிடமிருந்து வந்துள்ளது.
எனவே, இந்த வைரஸ் இந்தியாவிற்கு வெளியே இருந்து கொண்டு வரப் பட்டதாகும்.
இதுவரை, உலகின் மற்ற பகுதிகளில் இந்த வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய ஒரு அறிவியல் பூர்வச் சான்று எதுவும் இல்லை.
இருப்பினும், நாட்டின் உள் மற்றும் வெளிக் காரணிகள், உயிரியல் காரணங்கள் மற்றும் நாட்டில் உள்ள மக்கள் ஆகிய காரணிகளின் காரணமாக இந்த வைரசானது அதன் வெவ்வேறு வடிவங்களை உருவாக்கியுள்ளது என்பதை ICMR உறுதி செய்துள்ளது.