TNPSC Thervupettagam

கோவிட்-19 தடுப்பூசி நினைவு அஞ்சல் தலை வெளியீடு

January 19 , 2022 1280 days 532 0
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கோவிட்-19 தொற்றுநோய் தடுப்பூசியின் நினைவாக உருவாக்கப்பட்ட ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டார்.
  • இந்தியாவின் தேசிய அளவிலான கோவிட் தொற்று தடுப்பூசி வழங்கீட்டுத் திட்டத்தின் முதலாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இது வெளியிடப்பட்டது.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு மற்றும் பாரத் பயோடெக்  நிறுவனம் ஆகியவை இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசி நினைவாக இது வெளியிடப் பட்டுள்ளது
  •  2021 ஆம் ஆண்டு ஜூன் 21 முதல், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் என அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்