கௌதம் அதானி – ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர்
May 24 , 2021 1548 days 733 0
அதானி குழுமத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான கௌதம் அதானி அவர்கள் சீனாவின் சோங் சான்சான் என்பவரைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர் ஆகியுள்ளார்.
ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர் எனும் தகுதியை அடைவதற்கு காரணமான இவரது நிகர சொத்து மதிப்பானது 67.6 மில்லியன் டாலர்களாகும்.
இவர் உலகின் 14வது பணக்கார வர்த்தகர் ஆவார்.
கௌதம் அதானி தற்போது ஆசியாவின் பெரும் பணக்காரரான (நிகர சொத்து மதிப்பு 76 மில்லியன் டாலர்கள்) ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை விட ஒரு படி தான் கீழே உள்ளார்.
புளூம்பெர்க் பில்லியனெர்ஸ் குறியீட்டில் தற்போது கௌதம் அதானியை விட ஒரு படி மேலாக முகேஷ் அம்பானி அவர்கள் 13வது இடத்தில் உள்ளார்.