TNPSC Thervupettagam

கௌராமி மீன் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு

April 7 , 2026 15 hrs 0 min 58 0
  • டேராடூன் அருகிலுள்ள சிவாலிக் அடிவாரத்தில் கௌராமி உள்ளிட்ட நன்னீர் மீன் புதைபடிவங்கள் முதல்முறையாகக் கண்டறியப்பட்டன.
  • வாடியா இமயமலை புவியியல் நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களைச் சேர்ந்த அறிவியலாளர்களால் மோகண்ட் அருகே இந்தப் புதைபடிவங்கள் கண்டறியப்பட்டன.
  • இந்தக் கண்டுபிடிப்பில் விரால் மீன், கோபி மற்றும் கௌராமி போன்ற மீன்களின் ஓட்டோலித்ஸ் (செவி எலும்புகள்) அடங்கும்.
  • கௌராமிப் புதைபடிவமானது, இந்தியாவில் கண்டறியப்பட்ட முதல் பதிவாகவும், சுமத்ராவிற்குப் பிறகு உலகிலேயே இரண்டாவது பதிவாகவும் உள்ளது.
  • இந்த புதைபடிவங்கள் சுமார் 4.5 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை மற்றும் பிளியோசீன் காலத்தைச் (சுமார் 5.3 முதல் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) சேர்ந்தவை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்