பாதாள சாக்கடைகளில் அல்லது கழிவுநீர் தொட்டிகளில் எந்தவொரு மனிதரும் நுழையக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக நகர்ப்புற அமைச்சகத்தால் இது தொடங்கப் பட்டுள்ளது.
இது பாதாள சாக்கடைகளை அல்லது கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் மனிதர்களின் உயிர் பாதுகாப்பாகக் காப்பாற்றப்படுவதை உறுதிபடுத்துகிறது.
கழிவுகளைச் சுத்தம் செய்ய இயந்திரங்களைக் கட்டாயமாக்கும் பொருட்டு, மனிதக் கழிவுகளை வெளியேற்றுதலுக்கு மனிதர்களைப் பணியமர்த்தலுக்குத் தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வுச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை சமூக நீதித்துறை அமைச்சகம் திருத்தவுள்ளது
மனிதன் நுழையும் சாக்கடைகள் (manhole) என்ற வார்த்தையை அதிகாரப்பூர்வ பயன்பாட்டில் இயந்திரம் நுழையும் சாக்கடை (machine hole) என்று மாற்றவும் முன்மொழியப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டின் ஏப்ரல் 31 ஆம் தேதிக்குள் அனைத்துப் பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணிகளை இயந்திர மயம் ஆக்குவதாக மாநில அரசுகள் உறுதிமொழி எடுத்துள்ளன.
இந்தியாவில், 1993 ஆம் ஆண்டில், மனிதக் கழிவுகளை வெளியேற்றுதலுக்கு வேண்டி மனிதர்களைப் பணியமர்த்தல் செய்வது தடை செய்யப் பட்டது.