TNPSC Thervupettagam

சக்தி அறிஞர்கள் புத்தாய்வு மாணவர் உதவித் தொகை திட்டம்

December 27 , 2025 7 days 47 0
  • தேசிய மகளிர் ஆணையம் ஆனது சக்தி அறிஞர்கள் புத்தாய்வு மாணவர் உதவித் தொகை திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது 21 முதல் 30 வயதுடைய இளம் இந்திய ஆராய்ச்சியாளர்களை ஆதரிப்பதற்காக ஆறு மாத மானிய அடிப்படையிலான ஆராய்ச்சி புத்தாய்வு மாணவர் உதவித் தொகை திட்டம் ஆகும்.
  • பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதார அதிகாரமளித்தல், தலைமைத்துவம், இணைய வெளிப் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகள் போன்ற பெண்கள் சார்ந்தப் பிரச்சினைகள் குறித்த கொள்கை சார்ந்த, பலதரப்பட்ட ஆராய்ச்சிக்கு இந்தப் புத்தாய்வு மாணவர் உதவித் தொகை திட்டம் 1 லட்சம் ரூபாய் வழங்குகிறது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் என்பதோடு மேலும் அது தொடர்புடைய துறைகளில் முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் (M.Phil) அல்லது முனைவர் பட்டம் (PhD) பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகிறது.
  • பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கும் முன்னேற்றம் தொடர்பான ஆராய்ச்சி செயல் படுத்தலை உறுதி செய்வதற்கும் நிதி வழங்கீடானது பல்வேறு கட்டங்களாக வழங்கப் படுகிறது.
  • இந்த உதவித்தொகை இந்தியாவில் பெண்களுக்கான ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சி மற்றும் ஆதரவுக் கொள்கை மற்றும் நிறுவனச் சீர்திருத்தங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்