உத்தரப் பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அதிகாரமளிப்பை வலுப்படுத்துவதற்காக சக்தி திட்டம் 5.0 தொடங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள 1,647 காவல் நிலையங்களிலும் சக்தித் திட்ட மையங்கள் தொடங்கப்பட்டன என்ற நிலையில் அவற்றுடன் SOP (சீர்தர செயல்பாட்டு நடைமுறை) கையேடுகள் மற்றும் விழிப்புணர்வுப் பொருட்களும் சேர்க்கப்பட்டன.
உத்தரப் பிரதேச மாநில அரசானது 2017 ஆம் ஆண்டிற்கு முன்பு 10,000 ஆக இருந்த பெண் காவல்துறையினரின் எண்ணிக்கையை 2025 ஆம் ஆண்டுக்குள் 44,000க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, பெண்களுக்கு எதிரான 9,513 குற்ற வழக்குகளில் 12,271 குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டனர் என்ற நிலையில் இதில் 12 மரணத் தண்டனைகள் மற்றும் 987 ஆயுள் தண்டனைகள் அடங்கும்.