இந்திய ராணுவமானது பிரான்சு நாட்டு ராணுவத்துடன் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் பயிற்சியான 6வது சக்தி 2021 என்ற ஒரு பயிற்சியினை நடத்துகிறது.
ஏற்கெனவே 2021 ஆம் ஆண்டில் இந்தியா பிரான்சு நாட்டுடன் இணைந்து கூட்டுக் கடற்படைப் பயிற்சிகள் மற்றும் விமானப்படை பயிற்சிகள் போன்றவற்றை நடத்தியது.
சக்தி 2021 பயிற்சியானது நவம்பர் 15 முதல் நவம்பர் 26 வரை பிரான்சிலுள்ள ஃப்ரீஜஸ் நகரில் நடத்தப்படுகிறது.
இந்தப் பயிற்சியில், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கோர்க்கா ரைபிள்ஸ் காலாட்படை பிரிவின் வீரர் குழு பங்கேற்கும்.