சட்கோசியா வனவிலங்குச் சரணாலயத்தில் இந்திய மீன் கொத்திகள்
April 29 , 2023 929 days 402 0
ஓடிசாவின் சட்கோசியா வனவிலங்குச் சரணாலயத்தில் முதன்முறையாக இந்திய மீன் கொத்தி வகை (நீர் கிழிப்பான்) பறவைகளின் இனப்பெருக்கம் மேற்கொள்ளப் படச் செய்வதற்கான தடயங்கள் கண்டறியப் பட்டுள்ளன.
இவை வழக்கமாக நவம்பர் மாதத்தில் சட்கோசியாவிற்கு வந்து பின்பு மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அங்கு இருந்து வெளியேறுகின்றன.
இவை இந்தியா, வங்காளதேசம், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவையாகும்.
முன்னதாக இந்தியாவில் இவற்றின் இனப்பெருக்கம் கடைசியாக பல ஆண்டுகளுக்கு முன் மகாநதி ஆற்றுப் பகுதியின் முண்டுலி பகுதியில் பதிவு செய்யப் பட்டது.
வங்காளதேசம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படும் மீன் கொத்திகளின் எண்ணிக்கையானது முறையே 3,000 முதல் 3,500 வரை உள்ளதாக சமீபத்தியப் பல்வேறு ஆய்வுகளில் மதிப்பிடப்பட்டுள்ளது.