சட்டப்பூர்வ ரீதியில் திருமண வயதை உயர்த்துவதற்கான மசோதாவினை ஆய்வு செய்வதற்கான குழு
January 6 , 2022 1283 days 487 0
2021 ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடை (திருத்தம்) என்ற மசோதாவினை ஆய்வு செய்வதற்காக பாராளுமன்ற நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 31 உறுப்பினர்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் சுஷ்மிதா தேவ் மட்டுமே ஒரே ஒரு பெண் பிரதிநிதி ஆக இதில் உள்ளார்.
இந்த மசோதாவானது ஆண்களுக்கு நிகராக பெண்களின் திருமண வயதினையும் உயர்த்திட அதனை 18 வயதிலிருந்து 21 வயதாக நிர்ணயிப்பதற்கு விழைகிறது.
2021 ஆம் ஆண்டின் குழந்தைத் திருமணத் தடை (திருத்தம்) மசோதாவானது 2006 ஆம் ஆண்டின் குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தினையும் ஏழு தனிநபர் மீதான சட்டங்களையும் திருத்தி அமைக்க முனைகிறது.
அவை
இந்தியக் கிறித்துவத் திருமணச் சட்டம்,
பாரசீக திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம்,
இஸ்லாமியத் தனிநபர் சட்டத்தின் (சரியத்) பயன்பாட்டுச் சட்டம்