- இந்தியா, தீவிரவாத எதிர்ப்புச் சட்டமான (UAPA - Unlawful Activities (Prevention) Act) சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம், 1967-ன் கீழ் பிரிவினைவாதியான யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (JKLF - Jammu and Kashmir Liberation Front) என்ற அமைப்பைத் தடை செய்துள்ளது.
- காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரிவினைவாத சித்தாந்தத்தை JKLF முன்னெடுத்து வருகிறது. இது 1988 ஆம் ஆண்டிலிருந்து பிரிவினைவாத மற்றும் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முன்னணியில் உள்ளது.
- 1989 ஆம் ஆண்டில் காஷ்மீரி பண்டிட்களின் படுகொலையில் JKLF ஈடுபட்டது. இது காஷ்மீரி பண்டிட்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற வழிவகுத்தது.
சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம், 1967
- UAPA என்பது இந்தியாவில் சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு தீவிரவாத எதிர்ப்புச் சட்டமாகும்.
- UAPA ஆனது இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படும் விசாரணை நிறுவனங்களுக்குத் தேவையான அதிகாரங்களை வழங்குகிறது.
- இது சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்துரிமை, ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாகக் கூடுதல் மற்றும் கூட்டுறவு சங்கங்களை அமைத்தல் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகளை விதிக்கிறது.