TNPSC Thervupettagam

சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தோர்களுக்கான புதிய நாடுகடத்தல் கொள்கை

April 24 , 2026 2 days 102 0
  • சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர்களைக் கண்டறிந்து வெளியேற்றுவதை விரைவு படுத்துவதற்காக, உள்துறை அமைச்சகம் (MHA) புதிய நாடுகடத்தல் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது மாவட்ட அளவிலான சிறப்புப் படைகளை அமைப்பதையும், சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினரின் சரிபார்ப்பிற்கான 90 நாள் காலக்கெடுவையும் கட்டாயமாக்குகிறது.
  • குடும்பங்கள் பிரிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், அடிப்படை வசதிகளுடன் கூடிய தடுப்புக் காவல் மையங்கள் அமைக்கப்படும்.
  • இதன்படி சட்ட விரோத ஆவணங்கள் ரத்து செய்யப்படுவதுடன் புலம்பெயர்ந்தோர்கள் குடி வரவுப் பணியகத்தால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
  • அமலாக்கம் மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்தும் குடியேற்றம் மற்றும் வெளி நாட்டினர் சட்டம், 2025-இன் ஆதரவுடன் இக்கொள்கை செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்