TNPSC Thervupettagam

சட்ட விரோதமான வனவிலங்குகள் வர்த்தகம்

May 22 , 2019 2243 days 936 0
  • சர்வதேச உயிரியல் பன்முகத் தன்மை தினத்துடன் தொடர்புடைய ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரம் இந்தியாவில் பின்வரும் அமைப்புகளால் தொடங்கப்பட்டது.
  • ஐ.நா. சுற்றுச்சூழல் இந்தியா
  • இந்தியாவின் வனவிலங்குகள் மீதான குற்றத் தடுப்பு அமைப்பு
  • “அனைத்து விலங்குகளும் தன் விருப்பத்தின் பேரில் இடம் பெயருவதில்லை” என்ற முழக்கம் இந்தியாவெங்கிலும் உள்ள முக்கியமான விமான நிலையங்களில் காட்சிப்படுத்தப் படவிருக்கின்றது.
  • இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம் சட்ட விரோதமான வன விலங்குகள் வர்த்தகம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
சென்னை விமான நிலையம்
  • விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான டிராபிக் (வர்த்தகத்தில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வர்த்தகப் பதிவுகள் மீதான ஆய்வு - இந்தியா) என்ற அமைப்பின்படி தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தின் மையமாக சென்னை மாறி வருகின்றது.
  • இந்திய நட்சத்திர ஆமைகள், சிவப்பு செவி கொண்ட ஸ்லைடர் ஆமைகள், எறும்புத் திண்ணி, சுறா மீன் உறுப்புகள் ஆகியவை சென்னையிலிருந்து அதிகமாகக் கடத்தப்பட்ட விலங்குகளாகும்.
  • சென்னையிலிருந்து கடத்தப்பட்ட மிகப் பெரும்பான்மையான விலங்குகள் தென் கிழக்கு ஆசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் பாரம்பரிய மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. எ.கா. சுறா மீன் உறுப்புகள்.
  • சென்னை விமான நிலையத்திலிருந்து சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டவை பின்வறுமாறு
தேதி
பிடிபட்ட விலங்கு
மார்ச் 25, 2019 2 காண்டாமிருக உடும்புகளுடன் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த குழிப் பாம்புகள், 3 பாறை உடும்புகள், எகிப்தைச் சேர்ந்த 22 ஆமைகள், நீல நாக்கு கொண்ட 4 அரணைகள் மற்றும் 3 பச்சை மரத் தவளைகள்.
பிப்ரவரி 02, 2019 பேங்காக்கிலிருந்து வந்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிறுத்தைக் குட்டி
டிசம்பர் 20, 2018 பேங்காக்கிலிருந்து வந்த இரண்டு பயணிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 4,800 சிவப்பு செவி கொண்ட ஸ்லைடர் ஆமைகள்.
ஏப்ரல் 06, 2018 பேங்காக்கிலிருந்து வந்த ஒரு நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 65 நட்சத்திர ஆமைகள்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்