'சண்டாளர்கள்' என்ற சொல்லின் பயன்பாடு குறித்த எச்சரிக்கை
July 17 , 2024 382 days 439 0
தமிழ்நாடு மாநிலப் பட்டியலிடப்பட்டச் சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினருக்கான ஆணையமானது ‘'சண்டாளர்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மாநில அரசிற்கு ஓர் ஆலோசனை அறிக்கையினை வழங்கியுள்ளது.
மற்றவர்களை இழிவுபடுத்துவதற்காகவோ அல்லது நகைச்சுவையாகவோ அல்லது அரசியல் மேடைகளில் 'சண்டாளர்' என்ற சொல்லினைப் பயன்படுத்தக் கூடாது என்று அந்த ஆணையம் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தச் சொல்லினைப் பயன்படுத்துபவர்கள் மீது 1989 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டச் சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பட்டியலிடப்பட்டச் சாதியினர் பட்டியலில் ‘'சண்டாளர்' 48வது குறியீட்டு எண் என்ற வரிசையில் பட்டியலிடப் பட்டுள்ளது.