சதுப்பு நிலக்காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பிற்கான சர்வதேச தினம் 2026 - ஜூலை 26
July 31 , 2026 19 days 101 0
சதுப்பு நிலக்காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் அதன் நிலையான மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாங்குரோவ் காடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இத்தினம் 2015 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்திய வன நிலை அறிக்கை (ISFR) 2023 இன் படி, இந்தியாவில் 4,992 சதுர கிலோமீட்டர் சதுப்பு நிலக்காடுகள் உள்ளன என்ற நிலையில் இதில் மேற்கு வங்கம் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
உப்பைத் தாங்கி வளரக்கூடிய கடலோரக் காடுகளான சதுப்பு நிலக்காடுகள் இவை கடற்கரைகளைப் பாதுகாக்கவும், கார்பனைச் சேமிக்கவும் மற்றும் கடல் பல்லுயிர்ப் பெருக்கத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன.
தமிழ்நாடு வனத்துறையானது சதுப்பு நிலக்காடுகளின் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் அதனை மீட்டெடுப்பதற்கான மீன் எலும்பு கால்வாய் தொழில்நுட்பம் ஆகியவற்றை வலியுறுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது.