சதுப்பு நிலக் காடுகளின் சூழல் வளங்காப்பிற்கான சர்வதேச தினம் – ஜூலை 26
July 27 , 2021 1510 days 488 0
இந்த தினமானது 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற யுனெஸ்கோவின் பொது மாநாட்டினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
‘தனித்துவம் மிக்க, சிறப்புமிக்க மற்றும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய சூழலமைப்பாக’ திகழும் சதுப்புநிலக் காடுகளின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அவற்றின் நிலையான மேலாண்மை, வளங்காப்பு மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றிற்கான தீர்வுகளை மேம்படுத்தச் செய்வதையுமே நோக்கமாகக் கொண்டு இந்த தினமானது அனுசரிக்கப் படுகிறது.