TNPSC Thervupettagam

சதுப்பு நில பாதுகாப்பு கமிட்டி

October 20 , 2017 2878 days 1319 0
  • தமிழகம் முழுவதும் உள்ள  சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கும் அரசின் முயற்சியினுடைய தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான சதுப்புநில மேலாண்மை குழுக்களை அமைக்க தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • 11 உறுப்பினர்கள் உடைய இக்குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியரும், செயலாளராக மாவட்ட வன அதிகாரியும் இருப்பர்.
  • மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சதுப்பு நிலங்களிலும் ஒருங்கிணைக்கப்பட்ட சதுப்புநில மேலாண்மையை (Integrated Wetland Management) கொண்டு வரும் பொருட்டு செயல்படும் உச்ச அமைப்பான தமிழ்நாடு மாநில சதுப்பு நில ஆணையம் (Tamil Nadu State Wetland Authority) இந்த மாவட்ட குழுக்களை வழிநடத்தி, அவற்றின் பணிகளை மேற்பார்வையிடும்.
  • ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள சதுப்புநிலங்களை பாதுகாப்பதும், மேலாண்மை செய்வதுமே இந்த குழுவின் முக்கிய பொறுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்