TNPSC Thervupettagam

சத்கோசியா புலிகள் காப்பகத்தில் புலிகள் மறுஅறிமுகம்

July 6 , 2026 14 hrs 0 min 73 0
  • ஒடிசாவில் உள்ள சத்கோசியா புலிகள் காப்பகத்தில் புலிகள் மறுஅறிமுகத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
  • சத்கோசியா புலிகள் காப்பகம் 523 சதுர கிலோமீட்டர் மையப் பகுதி உட்பட 1,136 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது என்பதுடன் மேலும் தற்போது இங்கு புலிகள் எதுவும் இல்லை.
  • புலிகள் மறு அறிமுகம் என்பது, பொருத்தமான வாழ்விடம் மற்றும் இரை கிடைப்பதை உறுதிசெய்த பின்னர், புலிகள் குறைந்து போன அல்லது அவை அழிந்துபோன வாழ்விடங்களுக்கு அவற்றை இடமாற்றம் செய்வதை உள்ளடக்கியது.
  • 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறு அறிமுகத் திட்டம், ஒரு புலி வேட்டைக் காரனின் வலையில் சிக்கி இறந்ததாலும், சுந்தரி என்ற பெண்புலி மனித-வனவிலங்கு மோதல் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டதாலும் தோல்வியடைந்தது.
  • இத்திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு, கிராமப்புற இடமாற்றம், இரைகளின் எண்ணிக்கையை மேம்படுத்துதல், மீற முடியாத பகுதிகளை உருவாக்குதல், ஊழியர்களின் திறனை மேம்படுத்துதல் மற்றும் வலுவான பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) அறிவுறுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்