TNPSC Thervupettagam

சத்தீஸ்கர் அரசாங்கத்தின் புதிய திட்டங்கள்

October 3 , 2019 2056 days 808 0
  • சத்தீஸ்கர் அரசு 5 புதிய திட்டங்களை அறிமுகப் படுத்தியது.
  • அந்த திட்டங்களின் விவரங்கள் பின்வருமாறு
1. முக்கிய மந்திரி சுபோஷன் அபியான்
  • இந்த முதலமைச்சர் ஊட்டச் சத்து திட்டத்தின் கீழ், ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் இரத்த சோகை கொண்டப் பெண்களுக்கு பஞ்சாயத்துகள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் உதவியுடன் சுத்தமான  மற்றும் சத்தான உணவு வழங்கப் படுகிறது.

2. முக்கிய மந்திரி ஹாத் பஜார் கிளினிக் யோஜனா

  • இந்த முதலமைச்சர் சந்தை மருத்துவத் திட்டத்தின் கீழ், மாநிலத்தின் தொலைதூரப் பழங்குடியினர் மற்றும் வனப் பகுதிகளில் சுகாதார வசதிகளை வழங்குவதற்காக சுகாதாரத் துறையின் நடமாடும் குழுக்கள் மருத்துவர்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் உள்ளூர் சந்தைகளைப் பார்வையிடும்.
3. முக்கிய மந்திரி ஷஹாரியா ஸ்லம் ஸ்வஸ்திய யோஜனா
  • இந்த முதலமைச்சர் நகர்ப்புற சேரி சுகாதார திட்டத்தின் கீழ் கிடைக்கக் கூடிய சுகாதார வசதிகளுடன் 7 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் நடைமுறைப் படுத்தப்படும்.
  • ஆரம்பத்தில் 3 நடமாடும் மருத்துவ குழுக்கள் ராய்ப்பூரிலும், தலா 2 நடமாடும் மருத்துவ குழுக்கள் பிலாய் மற்றும் கோர்பாவிலும், தலா ஒன்று மற்ற நகராட்சிகளிலும் நிறுத்தப்படும்.
4. அனைவருக்குமான  பொது விநியோக முறை
  • இந்தப் பொது விநியோக முறை திட்டத்தின் கீழ், பொது வகை குடும்பங்கள் (வரி செலுத்துவோர் மற்றும் வரி செலுத்தாதோர்) உணவு தானியங்கள் பெறத்  தகுதியுடையவர்கள் ஆவர்.
  • ஒரு கிலோ 10 ரூபாய் என்ற விலையில் ஒற்றை உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள் மாதத்திற்கு 10 கிலோ அரிசி பெறவும், 2 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள் மாதத்திற்கு 20 கிலோ அரிசியும், 3 பேர்  அல்லது 3க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள் ஒரு மாதத்திற்கு 35 கிலோ அரிசியும்  பெறத் தகுதியுடையவர்கள் ஆவர் .
5. முக்கிய மந்திரி வார்டு காரியாலயாஸ்
  • இந்த முதலமைச்சர் வார்டு அலுவலகங்கள் திட்டத்தின் கீழ், நகர மக்களுக்கு அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப குடிமக்கள் சேவைகள் மற்றும் வசதிகள் உடனடியாக கிடைக்க வழிவகை செய்யப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்