பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிராவின் புனே நகரில் அமைக்கப் பட்டுள்ள மராட்டியப் போர் வீரர் சத்ரபதி சிவாஜி அவர்களின் சிலையைத் திறந்து வைத்து உள்ளார்.
சுமார் 9.5 அடி உயரம் கொண்ட இந்த சிலையானது 1850 கிலோகிராம் எடையுள்ள துப்பாக்கி உலோகத்தினால் ஆனது.
மேலும் புனேயிலுள்ள முலா-முதா நதித் திட்டங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் மாசு குறைபாட்டுத் திட்டப் பணிகளுக்கான ஒரு அடிக்கல்லினையும் பிரதமர் அவர்கள் நாட்டினார்.