TNPSC Thervupettagam

சந்திரனில் அரிய விண்கற்கள்

October 26 , 2025 26 days 81 0
  • சீன அறிவியலாளர்கள் சங்-இ-6 கலத்தினால் புவிக்குக் கொண்டு வரப்பட்ட சந்திர மண்ணில் அரிய விண்கல் அடையாளங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • ஆராய்ச்சியாளர்கள் வெளிப்புற சூரிய மண்டலத்திலிருந்து தோன்றிய CI காண்டிரைட் துண்டுகள், நீர் மற்றும் கார்பன் நிறைந்த விண்கற்களை அடையாளம் கண்டனர்.
  • புவி-சந்திரன் அமைப்பு ஆனது முன்னர் அறியப்பட்டதை விட அதிக கார்பனேசிய காண்டிரைட் தாக்கங்களை எதிர் கொண்டதாகவும், மேலும் இது நிலவில் நீரின் தோற்றத்தை விளக்கக் கூடும் என்றும் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
  • 2024 ஆம் ஆண்டில் நிலவின் தொலைதூரப் பகுதியான ஐட்கன் எனும் தென் துருவப் படுகையிலிருந்து சங்'இ-6 விண்கலம் 1,935.3 கிராம் எடை கொண்ட மாதிரிகளை புவிக்குத் திருப்பி அனுப்பியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்