மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகமானது ‘சந்துஷ்த்’ என்ற ஒரு இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த இணையதளமானது அடிமட்ட அளவில் தொழிலாளர் சட்டங்கள் செயல்படும் விதத்தைக் கண்காணிப்பதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளமானது தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் (வேலை அளிப்பவர்களின்) ஆகியோரின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது EPFO (தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் - Employment Provident Fund Organization) மற்றும் ESIC (அரசுத் தொழிலாளர்கள் காப்பீட்டுக் கழகம் - Employment State Insurance Corporation) ஆகியவற்றினால் வழங்கப்படும் சேவைகளைக் கண்காணிக்கின்றது.
பொது மக்களின் குறைபாடுகளுக்காக, மையப்படுத்தப்பட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு (Centralized Public Grievance Redressal and Monitoring System - CPGRAMS) இணையதளமானது ஏற்கனவே செயல்பட்டு வருகின்றது.