சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள்
February 6 , 2025 191 days 246 0
சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்களின் (MIIs) சட்டப்பூர்வக் குழுக்களின் செயல் திறனை மதிப்பிடுவதற்கான சில பல வழிகாட்டுதல்களை இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களின் கீழ், MII நிறுவனங்கள் அவற்றின் செயல்திறன் மற்றும் அவற்றின் சட்டப்பூர்வக் குழுக்களின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்காக வேண்டி ஒரு தன்னாட்சியில் இயங்கச் செய்யும் ஒரு வெளிப்புற முகமையினை உடனே நியமிக்க வேண்டும் என்பதோடு இது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று நியமிக்கப்பட வேண்டும்.
MII நிறுவனங்கள் ஆனது பங்குச் சந்தைகள், பரிவர்த்தனைத் தீர்வு நிறுவனங்கள் மற்றும் வைப்புத்தொகைகளை உள்ளடக்கியவையாகும்.
முதல் மதிப்பீடு ஆனது 2024-2025 நிதியாண்டு சார்ந்த மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும், மேலும் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.