இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் M.வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் இணைந்து சன்சத் என்ற தொலைக் காட்சியினை தொடங்கி வைத்தனர்.
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றுக்கான தொலைக்காட்சியினை இணைக்கும் முடிவானது மேற்கொள்ளப் பட்டது.
பாராளுமன்ற அமர்வின் போது சன்சத் தொலைக்காட்சியின் இரண்டு அலைவரிசைகள் மூலம் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றின் செயல்பாடுகள் ஒரே நேரத்தில் தனித்தனியாக ஒளிபரப்பப்படும்.
சன்சத் தொலைக்காட்சியானது பிரதானமாக பாராளுமன்ற மற்றும் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகள், ஆளுகை மற்றும் திட்டம்/கொள்கை அமலாக்கம், இந்திய வரலாறு மற்றும் பண்பாடு மற்றும் சமகாலத்து விவகாரங்கள் சார்ந்த பிரச்சினைகள்/நலன்கள்/சிக்கல்கள் ஆகிய 4 பிரிவுகளில் ஒளிபரப்பப் படும்.
மக்களவைத் தொலைக்காட்சியானது 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப் பட்டது.
இது முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அவர்களின் சிந்தனையில் உதித்தது ஆகும்.
மாநிலங்களவைத் தொலைக்காட்சி 2011 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.