TNPSC Thervupettagam
September 17 , 2026 4 days 71 0
  • சன்சத் ரத்னா விருதுகள் 2026-க்காக 10 மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள், 2 மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 நாடாளுமன்ற நிலைக்குழுக்களை நடுவர் குழு தேர்ந்தெடுத்துள்ளது.
  • கேள்விகள், விவாதங்கள், தனிநபர் மசோதாக்கள், குழுப் பணிகள் மற்றும் வருகை ஆகியவற்றின் அடிப்படையில் நாடாளுமன்ற செயல்பாடுகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.
  • பி.பி. சவுத்ரி நான்காவது முறையாக இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • 12 தனிநபர் விருது பெற்றவர்களில் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்குவர்.
  • வேளாண்மை, நிதி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் ஆகிய நான்கு குழுக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
  • முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உந்துதலால், பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் 2010 ஆம் ஆண்டில் சன்சத் ரத்னா விருது தோற்று விக்கப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்